மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை!
பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள்
இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை.
கீரை வகைகளை உணவோடு சேர்க்கச்
சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை
வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக்
கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு
பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம்
கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன்
சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு
தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும்
மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம்
படைத்தது முருங்கைக் கீரை. சாதாரணமாக வீட்டுக்
கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம்
என்றே சொல்ல வேண்டும். ஏனெனில்
இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல
வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.
இது ஒரு சத்துள்ள காய்.
உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க
வல்லது. இதன் சுபாவம் சூடு.
ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது.
இதை உண்டால் சிறுநீரும் தாதுவும்
பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற
பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய்
பிஞ்சு ஒரு பத்திய உணவாகும்.
இதை நெய் சேர்த்தோ அல்லது
புளி சேர்த்தோ சமைப்பது நலம். முருங்கைப் பட்டையை
நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும்
வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.
முருங்கை இலையை உருவி காம்புகளை
நறுக்கி விட்டு பின் மிளகு
ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து
உண்டு வந்தால் கை, கால்
உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.
மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள
மறவாதீர்கள்.
Tuesday, 30 October 2012
Sunday, 14 October 2012
மலாலாவை துபை அழைத்துவர ஆம்புலன்ஸ் விமானம் பாகிஸ்தான் செல்கிறது
பயங்கரவாதிகளின் குண்டுகள் துளைக்கப்பட்ட
பாகிஸ்தானின் 14 வயது போராளிச் சிறுமி மலாலா யூஸுஃப்ஸயீ-யின் மீண்டெழுந்து
வருவதற்கு பாகிஸ்தான் நாடு மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள சமூக
ஆர்வலர்களும், சிறார்களும் பிரார்த்தனை செய்து
மலாலா தன் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டு வருவதற்கு பாகிஸ்தான் தேசம் இன்று நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது. மீண்டு வா மலாலா!
வருகிறார்கள்.
மலாலாவின் மகத்தான வாழ்க்கைக் குறிப்பு இது... பாகிஸ்தானின் தாலிபான் பயங்கரவாதிகள் ஸ்வாத் பள்ளத்தாக்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது, சிறுமி மலாலாவுக்கு வயது 11. ஸ்வாத் பகுதியில் உள்ள பெண்கள் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்பது தாலிபான்களின் உத்தரவு.
அந்த இக்கட்டானச் சூழலில், மலாலா செய்த காரியம் வியப்புக்கு உரியது. அவர் தான் எழுதிய டயரிக் குறிப்புகளை புனைப் பெயர் ஒன்றில் பிபிசி உருது மொழிப் பிரிவுக்கு அனுப்பினார். அதில், பயங்கரவாதிகளால் தங்கள் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பதிவு செய்தார். குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதைச் சொன்னார். ஸ்வாத் பகுதியின் உண்மை நிலை உலகுக்குத் தெரிந்தது. விளைவு... அப்பகுதியில் இருந்து தாலிபான் பயங்கரவாதிகள் விரட்டப்பட்டனர்.
இவையெல்லாம் நடந்தபின்புதான் தெரியும் அந்த டயரிக் குறிப்புகளை அனுப்பி வந்தது சிறுமி மலாலா என்பது. அவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. போராளிச் சிறுமிக்குத் தீரச் செயலுக்கான தேசிய விருதும் கிடைத்தது. மலாலாவின் பெயர், சிறார்களுக்கான சர்வதேச அமைதி விருது ஒன்றுக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
"பெரியவள் ஆகும்போது சட்டம் படித்து அரசியலுக்கு வரவேண்டும். கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் நாடாக பாகிஸ்தான் விளங்க வேண்டும்." - இதுவே நம் மலாலாவின் கனவு.
*
இந்தச் சூழலில்தான் மலாலாவைப் பழிவாங்கி இருக்கிறார்கள் பயங்கரவாதிகள். சிறுமியைக் கொல்வதற்குத் திட்டமிட்டனர். அதன்படி, பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தவரை, அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் மலாலா படுகாயம் அடைந்தார்.
தலிபான்களால் சுடப்பட்ட 14-வயது சிறுமி 'மலாலா யூஸுஃப்ஸயீ' யை அமீரகம் அழைத்துவர சிறப்பு மருத்துவ விமானம் பாகிஸ்தான் அனுப்பப் படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்த மலாலா யூஸுஃப்ஸயீ என்ற 14 வயது சிறுமி மீது கடந்த செவ்வாயன்று கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது.
கடும் காயமுற்ற மலாலவுக்கு பாகிஸ்தானில் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் இவரை அமீரகம் அழைத்து வந்து மேல்சிகிச்சை அளிக்க, சிறப்பு மருத்துவ விமானம் பாகிஸ்தான் செல்ல இருப்பதாக அமீரகத்திற்கான பாகிஸ்தான் தூதுவர் ஜமீல் அஹமது கான் தெரிவித்தார். இந்த விமானத்தில் 6 மருத்துவர்கள் கொண்ட குழுவும் செல்லும் என அவர் தெரித்தார்.
மேலும் மலாலாவுக்கு மருத்துவம் தர துபை மற்றும் அபூதாபி பகுதிகளில் மூன்று முக்கிய மருத்துவமனைகள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மலாலாவை அமீரகத்திற்கு அனுப்புவது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப் படவில்லை என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இப்போது,மலாலாவின் மகத்தான வாழ்க்கைக் குறிப்பு இது... பாகிஸ்தானின் தாலிபான் பயங்கரவாதிகள் ஸ்வாத் பள்ளத்தாக்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது, சிறுமி மலாலாவுக்கு வயது 11. ஸ்வாத் பகுதியில் உள்ள பெண்கள் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்பது தாலிபான்களின் உத்தரவு.
அந்த இக்கட்டானச் சூழலில், மலாலா செய்த காரியம் வியப்புக்கு உரியது. அவர் தான் எழுதிய டயரிக் குறிப்புகளை புனைப் பெயர் ஒன்றில் பிபிசி உருது மொழிப் பிரிவுக்கு அனுப்பினார். அதில், பயங்கரவாதிகளால் தங்கள் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பதிவு செய்தார். குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதைச் சொன்னார். ஸ்வாத் பகுதியின் உண்மை நிலை உலகுக்குத் தெரிந்தது. விளைவு... அப்பகுதியில் இருந்து தாலிபான் பயங்கரவாதிகள் விரட்டப்பட்டனர்.
இவையெல்லாம் நடந்தபின்புதான் தெரியும் அந்த டயரிக் குறிப்புகளை அனுப்பி வந்தது சிறுமி மலாலா என்பது. அவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. போராளிச் சிறுமிக்குத் தீரச் செயலுக்கான தேசிய விருதும் கிடைத்தது. மலாலாவின் பெயர், சிறார்களுக்கான சர்வதேச அமைதி விருது ஒன்றுக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
"பெரியவள் ஆகும்போது சட்டம் படித்து அரசியலுக்கு வரவேண்டும். கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் நாடாக பாகிஸ்தான் விளங்க வேண்டும்." - இதுவே நம் மலாலாவின் கனவு.
*
இந்தச் சூழலில்தான் மலாலாவைப் பழிவாங்கி இருக்கிறார்கள் பயங்கரவாதிகள். சிறுமியைக் கொல்வதற்குத் திட்டமிட்டனர். அதன்படி, பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தவரை, அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் மலாலா படுகாயம் அடைந்தார்.
மலாலா தன் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டு வருவதற்கு பாகிஸ்தான் தேசம் இன்று நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது. மீண்டு வா மலாலா!
டெங்கு காய்ச்சல்: சென்னையில் 26 பேர் பாதிப்பு- மாநகராட்சி கமிஷனர் தகவல்
சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:-
சென்னையில் இந்த மாதம் 26 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
தண்டையார்பேட்டை
தொற்று நோய் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்காக சிறப்பு வார்டு
அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக தேவையான முன் எச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன.
கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில்
மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. நகரில் உள்ள 456 தனியார்
மருத்துவமனைகளோடு மாநகராட்சி தொடர்பு வைத்துள்ளது. டெங்கு காய்ச்சல்
அறிகுறி இருந்தால் அதுபற்றி உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
வீடுகளை சுற்றி தண்ணீர்
தேங்கி இருப்பது, டயர் மற்றும் தேங்காய் சிரட்டை போன்ற கழவுகளை கொட்டி
வைப்பதால் அதில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதுபற்றி பொது
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள்
வினியோகிக்கப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக மாநகராட்சி
பள்ளிகளில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. நாளை முதல் மற்ற
அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும். பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை.
சுற்றுப் புறங்களை துய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள
பொருட்களை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் 6 மாதங்களுக்குள் மின்பற்றாக்குறை நீக்கப்படும்: அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் சிதம்பரம் வடக்குமெயின்ரோட்டில் உள்ள பைசல் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட செயலாளர் துரை.மணிவேல் வரவேற்றார்.
பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், இளவரசன் எம்பி, முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம் எம்.எல்.ஏ., முருகுமாறன் எம்.எல்.ஏ. பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும், தமிழக நிதிஅமைச்சருமான பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 1977க்கும் பிறகு அ.தி.மு.க. போட்டியிடவில்லை என இங்கு கூறினார்கள். ஆனால் வரும் தேர்தலில் இத்தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும். முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் வேட்பாளரை நாம் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
தானே புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு 1 லட்சம் காங்கிரீட் வீடுகள் கட்டித்தர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சிறிய பிரச்சினை உள்ளது. மின்வெட்டுபிரச்சினை. 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் உற்பத்தி செய்த மின்சாரத்தை வெளிநாட்டிற்கும் விற்பனை செய்தோம். அதன்பிறகு வந்த தி.மு.க. அரசு எந்த மின்உற்பத்தியையும் தொடங்கவில்லை.
தற்போது கூடுதலான மின் உற்பத்திக்கான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இன்னும் 6 மாதங்களுக்குள் மின்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். 13 ஆண்டுகள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கருணாநிதி தமிழகத்திற்கு என்ன திட்டத்தை கொண்டு வந்தார். எந்த திட்டத்தையும் கொண்டு வராத கருணாநிதிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் எதற்கு வாக்களிக்க வேண்டும்.
இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தவர் கருணாநிதி. அதனால் தற்போது மீனவர்கள் இலங்கை கடல்பகுதியில் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. காவிரி நீர் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா 3 முறை உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அதில் வெற்றி பெற்றுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் அணையில் 152 அடி வரை நீர் தேக்கலாம் என்ற உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பை பெற்றுள்ளார். முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கான உரிமை கிடைக்கும். இந்தியா வல்லரசாக முடியும்.
எனவே புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக அ.தி.மு.க.வினர் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மின்துறை அமைச்சர் விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி, வீட்டுவசதிதுறை அமைச்சர் வைத்திலிங்கம், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் சம்பத், முன்னாள் அமைச்சர் கலைமணி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் வரகூர் அருணாசலம் உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் நடுகடலில் தாக்குதல்: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது43). இவருக்கு சொந்தமான 2 விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகளில் குருநாதன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் முத்து(37). ஆரோக்கியம் (45). குழந்தைவேலு (42) மாரிமுத்து (30), சங்கரன்(40), சம்பந்த மூர்த்தி(30), குமார் (50) உள்ளிட்டோர் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.
2 விசைபடகுகளில் அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். 14 நாட்டிக்கல் கடல் மைல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது திடீரென்று வேகமாக அங்கு ரோந்து படகு ஒன்று வந்தது.
அதில் இலங்கையை சேர்ந்த கடற்படையினர் இருந்தனர். இலங்கை படையினர் திமு, திமுவென ஜெகதாபட்டினம் மீனவர் படகில் ஏறினார்கள். எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கிறீர்களா? என்று கேட்டுக்கொண்டே தடியால் மீனவர்களை தாக்கினார்கள். பின்னர் இந்த இடத்தை விட்டு ஓடிவிடுங்கள் என்று மிரட்டிவிட்டு மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்தி விட்டு சென்றுவிட்டனர்.
இதில் குருநாதன், முத்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக மீனவர்கள் மீன்பிடிப்பதை விட்டு விட்டு கிழிந்த எறிந்த வலைகளை எடுத்துக் கொண்டு கரைக்கு திரும்பினார்கள். இதுகுறித்து குருநாதன், தமிழக கடலோர பாதுகாப்பு குழு மந்திரியிடம் புகார் செய்தார். இந்த சம்பவம் ஜெகதாபட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Friday, 12 October 2012
கவிதை-நினைவுகள்
நினைவுகள் !
கண்களை மூடினால் வரும் கனவுகளை விட
கண்களை திறந்திருந்தால்வரும் உன் நினைவுகள் தான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ..
---------------------------------------
திட்டு!
பிடித்த பாடலை கேட்பதில் இருக்கும் ஆனந்தத்தைவிட
நீ என்னை உரிமையோடு திட்டிய வார்த்தையை திரும்ப திரும்ப கேட்பதில்
திகட்டாத இன்பம் கிடைக்கிறது !!!
-------------------------------------
கண்கள்!
நீ மௌனமாய்
என்னை கடந்து செல்லும்போதும்
ஆறுதலாக ஓரிரு வார்த்தைகள்
பேசிவிட்டுத்தான் செல்கின்றன
உன் "கண்கள்"
--------------------------------------------
தனிமை!
யாருமற்ற நேரங்களில்
உணரப்படுவது தனிமையல்ல
யாவுமிருந்தும் நீயில்லா தருணத்தில்
உணரப்படுவதே தனிமை..
---------------------------------------------------------
இன்னும் உன்னை எப்படி நேசிப்பதென்று
யோசிக்கும் முன்பே உன்னை நேசித்து விட்டேன்
இன்று யோசித்து கொண்டிருக்கின்றேன் ஏன் நேசித்தேன் என்றல்ல
இன்னும் இன்னும் உன்னை எப்படி நேசிப்பதென்று.

நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை
துர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வீழ்த்தியதுதான் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கை அழிப்பதுபோன்ற பண்டையகால சிற்பம் இன்றும் காணப்படுகிறது. துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி என வெவ்வேறு வடிவங்களில் போற்றப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில் திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்க தங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின் அடையாளத்தை அறிவித்தனர். அந்த நாள்தான் விஜயதசமி.
சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. .உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது
குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது .
சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப் பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது

இந்த வகை செடியின் காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.
சீர்+அகம்=சீரகம் என்று கூறப்படுகிறது ஆனால் சரி என்பதற்கு காரணம் இல்லை
ஆனால் தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது .திருஅண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது .
எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம் சீர்+அகம்=சீரகம் என்று கூறப்படுகிறது ஆனால் சரி என்பதற்கு காரணம் இல்லை
ஆனால் தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது .திருஅண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது .
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே
என தேரையர் என்ற சித்தர் சவால் விட்டுக் கூறுவதாக பாடல ஒன்று உண்டு .
சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
BOTONICAL NAME Cuminum Cyminum
FAMILY Apiaceae
சீரகத்திற்கு ஆங்கிலத்தில் ‘குமின்’ என்று பெயர்.
இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா,
கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக்
கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர,
பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து
சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. .
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து
மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல்
போய்விடும்
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.
சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
பொதுவாக சீரகம்
வெப்பமுண்டாக்கி stimulant
பசிதூண்டி stomachic
துவர்ப்பி astringent
வாய்வு அகற்றி carminative
மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை
உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை
செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி, மற்றும் ஆபாச படங்கள் அனுப்பினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் படும அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப் படும்
செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி, மற்றும் ஆபாச படங்கள் அனுப்பினால் 50 ஆயிரம்
ரூபாய் அபராதம் விதிக்கப் படும அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்
படும்
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான வரம்பு சட்டம் 1986 ஆண்டு நிறைவேற்றப் பட்ட சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொண்டு, மறுபடியும் அமுலுக்கு வரவுள்ளது. அதன்படி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி, மற்றும் ஆபாசப் படங்கள் அனுப்பினால் ரூபாய் 50 ஆயிரம் அபராதம், அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும். மேலும் அதே நபர் அந்த தவறை செய்தால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்காமலிருக்க மத்திய அரசு தொலைக்காட்சிப் பெட்டி, ரேடியோ, செல்போன், இணையதளம் இவைகளில் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு எடுத்து உள்ளதாகவும் தெரிகிறது.

அப்ரோ ஏசுதாஸ் கைது : தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்
விதிகளுக்கு புறம்பாக நிதி உதவி நிறுவனத்தை நடத்தியது தொடர்பான வழக்கில்
5 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வந்த அப்ரே நிறுவன நிறுவனர்
ஏசுதாஸ் பெங்களுரூவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அந்நிறுவனத்தின்
ஒருங்கிணைப்பாளர் தேவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மகளீர் சுய உதவி குழுக்களுக்கு, அப்ரே நிறுவனம் குறுங்கடன் வழங்கிவந்தது. இந்த நிறுவனத்தின் மீது நிதி மோசடி மற்றும் ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக நிறுவனத்தை நடத்தியது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அப்ரோ நிறுவனத்தின் மேலாளர் உள்ளிட்ட 5 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் புகார்கள் குவிந்த நிலையில் அப்ரோ நிறுவனர் ஏசுதாஸ் தலைமறைவானார். இந்நிலையில் ஏசுதாஸையும், அந்நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் தேவியையும் பெங்களூருவில் வைத்து மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Thursday, 11 October 2012
நிலா நிலா போகுதே
பாடல்:
நிலா நிலா போகுதே
திரைப்படம்:
அரவான்
இசை: கார்த்திக்
பாடியவர்கள்:
விஜய் பிரகாஷ் & ஹரிணி
பாடல் வரிகள்
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா போகுதே
நில்லாமல்
போகுதே
உலா உலா போகுதே
ஊர்வலமா
போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சு
மறைஞ்சு போகுதே
நிலா நிலா போகுதே
நில்லாமல்
போகுதே
உலா உலா போகுதே
ஊர்வலமா
போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சு
மறைஞ்சு போகுதே
இன்ப நிலா போகுதே
இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே
மயக்கி
மயக்கி போகுதே
வான் நிலவை நான் தழுவ
தேன் நிலவா மாறுதே
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா போகுதே
நில்லாமல்
போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சு
மறைஞ்சு போகுதே
மாலை வேளையில் பூக்கும் பூவையே
மனதில்
பொக்கிஷத்தை வைக்கும் பேழையே
மௌன கூட்டினை திறக்கும் சாவியே
கனவை உருட்டிவிடும் கள்ள சோழியே
மஞ்சம்
வந்த மதியே...ஏ ஏ
ஏ ஏ ஏ
ஏ
மஞ்சம்
வந்த மதியே என்னுயிரின் விதியே
விரகத்தை
கூட்டும் விழிகளின் சதியே
சிறகுள்ள
சிலையே சிற்றின்ப நதியே
நிலா நிலா மோக நிலா
மஞ்சள்
நிலா போகுதே
மோக நிலா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சு
மறைஞ்சு போகுதே
மூன்று
ஜாமமும் மயங்கும் வேளையில்
மருகி மருகி நிலா என்ன
பேசுதோ
காதல் கண்ணிலே வெட்கம் நெஞ்சிலே
இருந்தும்
பார்வையிலே ஜாடை பேசுதோ
மங்கை உடல் நிலவாய்...ஆ
ஆ ஆ ஆ
ஆ ஆ
மங்கை உடல் நிலவாய் மௌனத்தில்
தேய
பொங்கி
வரும் ஒளியாய் அங்கம் அலை
பாய
முழு மதியும் காய மூச்சுக்குழல்
தீய
நிலா நிலா போகுதே
நில்லாமல்
போகுதே
உலா உலா போகுதே
ஊர்வலமா
போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சு
மறைஞ்சு போகுதே
இன்ப நிலா போகுதே
இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே
மயக்கி
மயக்கி போகுதே
வான் நிலவை நான் தழுவ
தேன் நிலவா மாறுதே
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
Nila Nila Poguthey Lyrics
- Singers: Harini, Vijay Prakash
- Composer: Karthik
- Lyrics: Na. Muthukumar
Sunday, 7 October 2012
சமையல் கியாசை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் உயர்கிறது: டீலர்களுக்கு ஆதரவாக அரசு முடிவு
சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோக டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷனை ரூ.25.83-ல் இருந்து ரூ.37.25 ஆக நேற்று மத்திய அரசு உயர்த்தியது. இதனால் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.11.42 உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் சமையல் கியாஸ் டீலர்களின் கமிஷனை உயர்த்தியதுபோல பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் டீலர்களின் கமிஷனை உயர்த்துவது பற்றியும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தங்கள் கமிஷனை பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.2.10-ம், டீச லுக்கு லிட்டருக்கு ரூ.1.33-ம் அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். பங்க் உரிமையாளர்கள் இதுபற்றி கூறுகையில், நாங்கள் வருடத்துக்கு 365 நாளும் பணியாற்றுவதால் இயக்கச் செலவு அதிகமாகி விட்டது. எங்கள் முதலீடும் உயர்ந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் எங்களது கமிஷனை வெறும் 10 சதவீதம் உயர்த்துவதை எப்படி ஏற்க முடியும்? என்கிறார்கள்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கமிஷன் கோரிக்கையை முழுமையாக ஏற்க இயலாது என்று பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது. பெட்ரோலுக்கான கமிஷனை 23 பைசா உயர்த்தியும், டீசலுக்கான கமிஷனை 10 பைசா உயர்த்தியும் கொடுக்க பெட்ரோலியம் அமைச்சகம் முன் வந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் பெட்ரோல்-டீசல் விலை சிறிது உயரும்.
அதாவது பெட்ரோல் விலை லிட்டருக்கு 67 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 42 பைசாவும் உயரும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு இப்படி விலையை அதிகரித்துகொண்டே செல்வது எழைகள், நடுத்தர மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு ஒரு மணி நேரத்தில் பறக்கலாம்!
நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு ஒரு மணி நேரத்தில் பறக்கலாம்!
நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும், பிரிட்டனின் லண்டன் நகருக்கும் இடையேயான தூரம், 5,570 கி.மீ., இந்த தூரத்தை விமானத்தில் கடப் பதற்கு, ஏழில் இருந்
து, எட்டு மணி நேரம் ஆகும். மோசமான வானிலை ஏற்பட்டால், கூடுதல் நேரம் பிடிக்கும். ஆனால், நியூயார்க்கில் இருந்து, ஒரு மணி நேரத்துக்குள் லண்டனுக்கு செல்லும் வகையில்

, அதி நவீன விமானம் ஒன்று தயாராகி வருகிறது.
அமெரிக்காவின் நாசா தயாரித்துள்ள, இந்த அதி நவீன சூப்பர்சானிக் விமானத்துக்கு, "எக்ஸ்-51 ஏ வேவ் ரைடர்' என பெயரிடப்பட்டுள்ளது. இது மணிக்கு, 7,242 கி.மீ., வேகத்தில் செல்லும். போர்களின் போது, குண்டுவீச்சுக்காக பயன்படுத்தப் படும், பி-52 ரக விமானத்தின், இறக்கைகள், இதில் பொருத்தப் பட்டுள்ளன. முழுக்க முழுக்க ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும், இந்த விமானத்தின் சோதனை ஓட்டம், அமெரிக்காவில் நடந்து வருகிறது. சோதனை வெற்றி பெறும் பட்சத்தில், நியூயார்க்கில் இருந்து லண் டனுக்கு, ஒரு மணி நேரத்துக்குள்ளேயே சென்று விடலாம்.

இரு சக்கர வாகனம் K 1600 GTL,ஸ்கூட்டர் BMW அறிமுகம்
நான்கு சக்கர வாகனங்களில் உலகின் தலை சிறந்த நிறுவனங்களில் ஒன்றான பி.எம்.டபுள்யூ. (பவாரியன் மோட்டார் ஒர்க்ஸ்), ஃபிராங்பர்ட்டில் நடைபெற்றுவரும் (Frankfurt Motor Show) வாகன கண்காட்சியில், எதிர்கால நகர வாழ்க்கைக்கு ஏற்றதொரு இரு சக்கர வாகனத்தை (ஸ்கூட்டர்) அறிமுகம் செய்துள்ளது.
உலகத்தின் நகரங்கள் அனைத்தும், ஒருபக்கம் போக்குவரத்து நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிற நிலையில், மறுபக்கம், எரிபொருள் விலை நாளும் ஏறிக்கொண்டிருக்கிறது.
இவ்விரண்டையும் நகர போக்குவரத்திற்கு ஏற்பட்ட கடுமையான சவாலாக கருத்தில் கொண்டு இந்த புதிய இரு சக்கர வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கார் போன்ற பெரிய வாகனங்களால் சாலைகளில் அதிக இடத்தை ஆக்கிரமிப்பதாலேயே போக்குவரத்து தடைபடுகிறது என்பது அனைவரும் அறிந்ததாகும். அதே நேரத்தில், கார் அளிக்கும் சொகுசுப் பயணத்தை இரு சக்கர வாகனத்தைக் கொண்டு நிறைவு செய்ய முடியுமா? என்ற வினாவிற்கும் இந்த புதிய ஸ்கூட்டர் விடையளிக்கிறது.
பார்த்தவுடன் கருத்தை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், அளவிலும் சிறியது, சீறிக் கொண்டு வேகமாக செல்லவும் வல்லது. எரிபொருள்? மின்சாரம்தான்! 3 மணி நேரத்தில் முழுமையாக நிறைத்துக் கொள்ளும் மின்கலப் பெட்டி, முழுமையான நகரப் பயணத்திற்கு அன்றாடத் தேவைக்கும் அதிகமானதாக இருக்கும் என்று கூறுகிறது பி.எம்.டபுள்யூ.
இளசுகளின் கனவுகளில் இரு சக்கர வாகனம் என்பது எப்போதும் முதன்மையான கனவாக கண்டிப்பாக இருக்கும். K 1600 GTL.BMW அறிமுகம் செய்துள்ளது ஆறு சிலின்டர் என்ஜின் 160 HP விலை $25,845 அமெரிக்க டாலர் . நம் ஊரில் மதிப்பு BMW K1600 GTL Price in Delhi : Rs.25,52,000/- Ex Showroom
BMW K1600 GTL Price in India & Basic Information
|
BMW K1600 GTL Technical Specification
|
|
| Engine | In Line Six Cylinder, Four Stroke Engine With 4 Valves per Cylinder |
| Displacement | 1649 cc |
| Fuel Management | Electronic Fuel Injection |
| Max. Power | 160 hp @ 7500 rpm |
| Gearbox | 6 – Speed Gearbox |
| Compression Ratio | 13:0:1 |
| Tyre Size Front | 120 / 70 R17 |
| Tyre Size Rear | 180 / 55 R17 |
| Tank Capacity (lts) | 25 |
| Acceleration 0–100 km/h (s) | 4.7 |
| Top speed (km/h) | 222 |
| Kerb Weight (kg) | 319 |
| Overall Length (mm) | 2330 |
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை: மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்காக, கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கர்நாடகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்த நிலையில், நேற்று மாலை முதலே கர்நாடக தமிழக எல்லைப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று இரவிலும் இன்றும் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகள் கன மழை பெய்தது.
இதனால், ஒகேனக்கல் பகுதியில் காவிரியில் நீர் வரத்து அதிகரித்தது. கடும் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இதை அடுத்து இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தும் அதிகரித்தது. விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து விநாடிக்கு 26ஆயிரம் அடியாக அதிகரித்தது.
கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து 9ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படும் நிலையில், கர்நாடக தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இது மழை நின்றபிறகு குறைந்துவிடும். என்றாலும், இன்று மதியம் மேட்டூர் அணை நீர்மட்டம் 70.8 அடியாக இருந்தது; நீர் இருப்பு 33.3 டி.எம்.சி. என்ற அளவில் இருந்தது.
ஒவ்வொரு முறையும் காவிரியில் தண்ணீருக்காக இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் அதிகரிப்பதும், தீர்வு எதுவும் கிட்டாமல் பிரச்னை அதிகரிக்கும் நிலையில், காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து, சூடான நிலையை தணித்துவிடுவதும் வழக்கமாகிவிட்டது என்கின்றனர் விவசாயிகள். இந்த முறையும், மழை பெய்து, நேற்றைய கர்நாடக முழு அடைப்பு பதற்றத்தையும், டெல்டா விவசாயிகளின் குமுறலையும் அடக்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மேட்டூர் அணைக்கு தீடீர் நீர் வரத்து அதிகரிப்பு விவசாயிகளையும் பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் ஒருங்கே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Saturday, 6 October 2012
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், டெங்கு ஒழிப்பிற்கு உறுதிமொழி வாசிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், டெங்கு ஒழிப்பிற்கு உறுதிமொழி வாசிக்க
வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால்,
திருநெல்வேலி மாவட்டத்தில் பலர் இறந்தனர். மாநிலத்தில் டெங்கு காய்ச்சல்
பாதிப்பு உள்ளது. இதையடுத்து, சுகாதாரத்துறையினர், டெங்கு ஒழிப்பு
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, பள்ளி மாணவர்கள் மூலம்
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உறுதிமொழி:
டெங்கு பரப்பும் ஏ.டி.எஸ்., கொசுக்களை ஒழிப்பதற்கு, அனைத்து பள்ளிகளிலும்
தினமும் இறைவணக்கத்தின் போது, டெங்கு உறுதி மொழியை மாணவர்கள் ஏற்க
வேண்டும். வீட்டில் உள்ள தண்ணீரை மூடி வைக்க வேண்டும். மழை நீர் தேங்காமல்,
உரல், சிரட்டை, டயர்கள், டீக்கப்களை அப்புறப்படுத்த வேண்டும். சுற்றுப்
புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எனது வீட்டை சுத்தப்படுத்துவேன்.
இதை எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களிடமும் நான்
எடுத்துக்கூறுவேன். இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் முன் மாணவர்கள், உறுதிமொழி
ஏற்க வேண்டும்.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""டெங்கை ஒழிப்பதற்கு மாணவர்கள் பங்கு முக்கியம். மாணவர்களிடம் இந்த கருத்தை பரப்பினால், ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று நாங்கள் கருத்துக்களை பிரதிபலித்தது போல் அமையும்,''என்றார்.

16 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெய்ல் முதலிடம்
இலங்கையில் நடைபெறும் T20 உலகக்
கோப்பை கிரிக்கெட்டில் கெய்ல் 6 ஆட்டத்தில் 16 சிக்சர்கள் அடித்து
முதலிடத்தை பிடித்துள்ளார். வாட்சன் (ஆஸ்திரேலியா) 15 சிக்சர் அடித்து
2-வது இடத்திலும், லுக் ரைட் (இங்கிலாந்து) 13 சிக்சர் அடித்து 3-வது
இடத்திலும் உள்ளனர்.
நேற்றைய அதிரடி ஆட்டத்தில் கெய்ல் அபாரமாக ஆடி 41 பந்துகளில் 5பவுண்டரி 6 சிக்சர்கள் விளாசி 75 ரன்கள் குவித்து ஆஸ்ட்ரேலியாவுக்கு ஆப்பு வைத்தார்.
இந்தியாவை வரவிடக்கூடாது என்று பாகிஸ்தானுடன் வேண்டுமென்றே அசிங்கமாகத் தோற்ற ஆஸ்ட்ரேலியாவுக்கு நேற்று பேரடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.
6 சிக்சர் அடித்ததன் மூலம் இந்த உலக கோப்பையில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமையை பெற்றர்.
உலக கோப்பையை நாங்கள் தான் கைப்பற்றுவோம் என்று உறுதியாக சொல்கிறேன். இலங்கை அணிக்கு எனது வருத்ததை தெரிவிக்கிறேன். ஏனென்றால் இது எங்களது உலக கோப்பை என்று நினைக்கிறேன். வெஸ்ட் இண்டீசுக்குத்தான் எல்லா வகையிலும் அதிக ஆதரவு கிடைக்கும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் எங்கள் அணியில் அனைவரும் சிறப்பாக ஆடினார்கள். இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளோம்.
இவ்வாறு கெய்ல் கூறினார்.

சீன ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஷரபோவா-அசரென்கா
சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் மகளிருக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில்
உலகத் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள மரிய ஷரபோவா(ரஷ்யா), சீன வீராங்கனை
லீ நா என்பவரை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஷரபோவா, 6-4, 6-0 என்ற
நேர்செட்களில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். இதன்மூலம் முதல்
முறையாக பைனலுக்கு முன்னேற முயன்ற சீனாவின் கனவு தகர்ந்தது.
நாளை
நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஷரபோவா, பெலாரசின் முன்னணி வீராங்கனை
விக்டோரியா அசரென்காவை சந்திக்க உள்ளார். அரரென்காரை அரையிறுதி போட்டியில்,
ஜெர்மனியின் மரியன் பர்டோலியை 6-4, 6-2 என்ற நேர்செட்களில் வீழ்த்தியது
குறிப்பிடத்தக்கது.
ஐந்து ரூபாய் விலைக்கு கிடைக்கும் டைம் பாஸ்
ஸ்லிம் சைஸில் ஐந்து ரூபாய் விலைக்கு கிடைக்கும் டைம் பாஸ்
(பழைய) குமுதத்தின் சேட்டை + வண்ணத்திரை, சினிக்கூத்து ரக உள்ளடக்கம் = விகடன் டைம்பாஸ்
(பழைய) குமுதத்தின் சேட்டை + வண்ணத்திரை, சினிக்கூத்து ரக உள்ளடக்கம் = விகடன் டைம்பாஸ்
அட்டையோடு சேர்த்து அறுபத்தியெட்டு பக்கம். முழு வண்ணம். அட்டை மட்டும் ஆர்ட்
பேப்பர். உள்ளே வழக்கமான நியூஸ் பிரிண்ட். என்றாலும் ஐந்து ரூபாய்க்கு தரும்
டைம்பாஸ் சற்றே அதிகம்தான். மெயின் டிஷ் சினிமா. தொட்டுக்க ஊறுகாய் மாதிரி லேசாக
அரசியல்.
ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள தயார்: கெஜ்ரிவாலுக்கு ராபர்ட் வதேரா பதில்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, டி.எல்.எப். கட்டுமான நிறுவனத்திடம் இருந்து 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வெறும் ரூ.50 லட்சத்துக்கு வாங்கியதாக சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் சார்பில் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து முதல் முறையாக வதேரா பதில் அளித்துள்ளார். ‘அனைத்து எதிர்மறை நடவடிக்கைகளையும் என்னால் சந்திக்க முடியும்’ என்று வதேரா தனது பேஸ்புக் தளத்தில் தெரிவித்துள்ளார்.
சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில் ரூ.11.42 இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில் ரூ.11.42 இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு கடந்த வாரம் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ஆண்டுக்கு மானிய விலையில் 6 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும், கூடுதல் சிலிண்டர்கள் தேவைப்பட்டால் அன்றைய சந்தை விலையில் வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இன்று மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை 11 ரூபாய் 42 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு டீலர்களுக்கான கமிஷன் தொகை சிலிண்டருக்கு ரூ.25.83ல் இருந்து ரூ.37.25 ஆக உயர்த்தப்படும் என்று பெட்ரோலியத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக நுகர்வோருக்கு வழங்கப்படும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் மூலம் டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.399ல் இருந்து ரூ.410.42 ஆக உயர்த்துள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மானியம் அல்லாத சிலிண்டர்களுக்கான கமிஷனும் ரூ.12.17ல் இருந்து ரூ.38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அந்த சிலிண்டர்களின் விலை ரூ.883.50ல் இருந்து ரூ.921.50 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் பெட்ரோல் டீசலுக்கான கமிஷனும் உயர்த்தப்பட்டுள்ளதால், அதன் விலையும் உயரலாம்.

Tuesday, 2 October 2012
ஆந்திராவில் பாத யாத்திரை துவக்கினார் சந்திரபாபு நாயுடு
ஐதராபாத்: ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள்
முதல்வருமான, சந்திரபாபு நாயுடு, நேற்று, பாத யாத்திரை துவக்கினார்.
ஆந்திராவில், 2014ல், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில்,
தெலுங்கு தேசம் கட்சி, ஆட்சியைப் பிடிக்கும் வகையில், மக்களிடம் ஆதரவை
திரட்டவும், அரசியலில் தனக்குள்ள செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தவும்,
அம்மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திர
பாபு நாயுடு, நேற்று, மாநிலம் தழுவிய பாத யாத்திரையைத் துவக்கினார். தன்
மாமனாரும், மறைந்த முன்னாள் முதல்வருமான, என்.டி.ராமராவ் போட்டியிட்ட
தொகுதியான, ராயலசீமா பகுதியில் உள்ள, இந்துப்பூரில் இருந்து, பாத
யாத்திரையைத் துவங்கியுள்ள சந்திரபாபு நாயுடு, 2,300 கிலோ மீட்டர்
தூரத்திற்கு, 117 நாட்கள் பாத யாத்திரை மேற்கொள்கிறார். நாள் ஒன்றுக்கு, 20
கிலோ மீட்டர் தூரம் செல்ல திட்டமிட்டுள்ளார்; 13 மாவட்டங்களின் வழியாக
யாத்திரை நடைபெற உள்ளது.
யாத்திரை குறித்து, சந்திரபாபு நாயுடு கூறியதாவது: மக்களின் நன்மையை கருத்தில் கொண்டே, இந்த பாத யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற, ஆசையில் அல்ல. எல்லா வகையிலும் தோல்வியை கண்ட, காங்கிரஸ் கட்சியின் ஊழல்களால், நாடு, தற்போது நெருக்கடியில் உள்ளது. இதுபோன்ற கால கட்டத்தில், மக்களுக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன் என்பதை தெரிவிக்கவே, இந்த பாத யாத்திரை. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

பூரண மதுவிலக்கை கோரி ம.தி.மு.க., உண்ணாவிரதம்
ஈரோடு: ஈரோட்டில் ம.தி.மு.க., கட்சி சார்பில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி மாநிலம் முழுவதும், நேற்று ம.தி.மு.க.,வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். ஈரோட்டில் எம்.பி., கணேசமூர்த்தி தலைமையில் நடந்த உண்ணாவிரதத்துக்கு, பூங்கொடி சாமிநாதன், குழந்தைவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக பசுமை இயக்கம் ஜீவானந்தம் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். கீழ்பவானி பசான விவசாயிகள் சங்கம் நல்லச்சாமி, காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்கம் வேலாயுதம், கீழ்பவானி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு காசியண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.நகர செயலாளர் பொன்னுசாமி நன்றி கூறினார்.

Subscribe to:
Comments (Atom)