சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில் ரூ.11.42 இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு கடந்த வாரம் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ஆண்டுக்கு மானிய விலையில் 6 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும், கூடுதல் சிலிண்டர்கள் தேவைப்பட்டால் அன்றைய சந்தை விலையில் வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இன்று மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை 11 ரூபாய் 42 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு டீலர்களுக்கான கமிஷன் தொகை சிலிண்டருக்கு ரூ.25.83ல் இருந்து ரூ.37.25 ஆக உயர்த்தப்படும் என்று பெட்ரோலியத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக நுகர்வோருக்கு வழங்கப்படும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் மூலம் டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.399ல் இருந்து ரூ.410.42 ஆக உயர்த்துள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மானியம் அல்லாத சிலிண்டர்களுக்கான கமிஷனும் ரூ.12.17ல் இருந்து ரூ.38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அந்த சிலிண்டர்களின் விலை ரூ.883.50ல் இருந்து ரூ.921.50 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் பெட்ரோல் டீசலுக்கான கமிஷனும் உயர்த்தப்பட்டுள்ளதால், அதன் விலையும் உயரலாம்.

No comments:
Post a Comment