விதிகளுக்கு புறம்பாக நிதி உதவி நிறுவனத்தை நடத்தியது தொடர்பான வழக்கில்
5 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வந்த அப்ரே நிறுவன நிறுவனர்
ஏசுதாஸ் பெங்களுரூவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அந்நிறுவனத்தின்
ஒருங்கிணைப்பாளர் தேவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மகளீர் சுய உதவி குழுக்களுக்கு, அப்ரே நிறுவனம் குறுங்கடன் வழங்கிவந்தது. இந்த நிறுவனத்தின் மீது நிதி மோசடி மற்றும் ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக நிறுவனத்தை நடத்தியது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அப்ரோ நிறுவனத்தின் மேலாளர் உள்ளிட்ட 5 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் புகார்கள் குவிந்த நிலையில் அப்ரோ நிறுவனர் ஏசுதாஸ் தலைமறைவானார். இந்நிலையில் ஏசுதாஸையும், அந்நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் தேவியையும் பெங்களூருவில் வைத்து மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment