Showing posts with label T 20 cricket. Show all posts
Showing posts with label T 20 cricket. Show all posts

Saturday, 6 October 2012

16 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெய்ல் முதலிடம்

இலங்கையில் நடைபெறும் T20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கெய்ல் 6 ஆட்டத்தில் 16 சிக்சர்கள் அடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். வாட்சன் (ஆஸ்திரேலியா) 15 சிக்சர் அடித்து 2-வது இடத்திலும், லுக் ரைட் (இங்கிலாந்து) 13 சிக்சர் அடித்து 3-வது இடத்திலும் உள்ளனர்.

நேற்றைய அதிரடி ஆட்டத்தில் கெய்ல் அபாரமாக ஆடி 41 பந்துகளில் 5பவுண்டரி 6 சிக்சர்கள் விளாசி 75 ரன்கள் குவித்து ஆஸ்ட்ரேலியாவுக்கு ஆப்பு வைத்தார்.

இந்தியாவை வரவிடக்கூடாது என்று பாகிஸ்தானுடன் வேண்டுமென்றே அசிங்கமாகத் தோற்ற ஆஸ்ட்ரேலியாவுக்கு நேற்று பேரடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.

6 சிக்சர் அடித்ததன் மூலம் இந்த உலக கோப்பையில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமையை பெற்றர்.

உலக கோப்பையை நாங்கள் தான் கைப்பற்றுவோம் என்று உறுதியாக சொல்கிறேன். இலங்கை அணிக்கு எனது வருத்ததை தெரிவிக்கிறேன். ஏனென்றால் இது எங்களது உலக கோப்பை என்று நினைக்கிறேன். வெஸ்ட் இண்டீசுக்குத்தான் எல்லா வகையிலும் அதிக ஆதரவு கிடைக்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் எங்கள் அணியில் அனைவரும் சிறப்பாக ஆடினார்கள். இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளோம்.

இவ்வாறு கெய்ல் கூறினார்.