Friday, 12 October 2012

செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி, மற்றும் ஆபாச படங்கள் அனுப்பினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் படும அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப் படும்

செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி, மற்றும் ஆபாச படங்கள் அனுப்பினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் படும  அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்  படும்

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான வரம்பு சட்டம் 1986 ஆண்டு நிறைவேற்றப் பட்ட சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொண்டு, மறுபடியும் அமுலுக்கு வரவுள்ளது. அதன்படி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி, மற்றும் ஆபாசப் படங்கள் அனுப்பினால் ரூபாய் 50 ஆயிரம் அபராதம், அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும். மேலும் அதே நபர் அந்த தவறை செய்தால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்காமலிருக்க மத்திய அரசு தொலைக்காட்சிப் பெட்டி, ரேடியோ, செல்போன், இணையதளம் இவைகளில் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு எடுத்து உள்ளதாகவும்  தெரிகிறது.

No comments:

Post a Comment