Saturday, 6 October 2012

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள தயார்: கெஜ்ரிவாலுக்கு ராபர்ட் வதேரா பதில்


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, டி.எல்.எப். கட்டுமான நிறுவனத்திடம் இருந்து 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வெறும் ரூ.50 லட்சத்துக்கு வாங்கியதாக சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் சார்பில் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து முதல் முறையாக வதேரா பதில் அளித்துள்ளார். ‘அனைத்து எதிர்மறை நடவடிக்கைகளையும் என்னால் சந்திக்க முடியும்’ என்று வதேரா தனது பேஸ்புக் தளத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment