நான்கு சக்கர வாகனங்களில் உலகின் தலை சிறந்த நிறுவனங்களில் ஒன்றான பி.எம்.டபுள்யூ. (பவாரியன் மோட்டார் ஒர்க்ஸ்), ஃபிராங்பர்ட்டில் நடைபெற்றுவரும் (Frankfurt Motor Show) வாகன கண்காட்சியில், எதிர்கால நகர வாழ்க்கைக்கு ஏற்றதொரு இரு சக்கர வாகனத்தை (ஸ்கூட்டர்) அறிமுகம் செய்துள்ளது.
உலகத்தின் நகரங்கள் அனைத்தும், ஒருபக்கம் போக்குவரத்து நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிற நிலையில், மறுபக்கம், எரிபொருள் விலை நாளும் ஏறிக்கொண்டிருக்கிறது.
இவ்விரண்டையும் நகர போக்குவரத்திற்கு ஏற்பட்ட கடுமையான சவாலாக கருத்தில் கொண்டு இந்த புதிய இரு சக்கர வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கார் போன்ற பெரிய வாகனங்களால் சாலைகளில் அதிக இடத்தை ஆக்கிரமிப்பதாலேயே போக்குவரத்து தடைபடுகிறது என்பது அனைவரும் அறிந்ததாகும். அதே நேரத்தில், கார் அளிக்கும் சொகுசுப் பயணத்தை இரு சக்கர வாகனத்தைக் கொண்டு நிறைவு செய்ய முடியுமா? என்ற வினாவிற்கும் இந்த புதிய ஸ்கூட்டர் விடையளிக்கிறது.
பார்த்தவுடன் கருத்தை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், அளவிலும் சிறியது, சீறிக் கொண்டு வேகமாக செல்லவும் வல்லது. எரிபொருள்? மின்சாரம்தான்! 3 மணி நேரத்தில் முழுமையாக நிறைத்துக் கொள்ளும் மின்கலப் பெட்டி, முழுமையான நகரப் பயணத்திற்கு அன்றாடத் தேவைக்கும் அதிகமானதாக இருக்கும் என்று கூறுகிறது பி.எம்.டபுள்யூ.
இளசுகளின் கனவுகளில் இரு சக்கர வாகனம் என்பது எப்போதும் முதன்மையான கனவாக கண்டிப்பாக இருக்கும். K 1600 GTL.BMW அறிமுகம் செய்துள்ளது ஆறு சிலின்டர் என்ஜின் 160 HP விலை $25,845 அமெரிக்க டாலர் . நம் ஊரில் மதிப்பு BMW K1600 GTL Price in Delhi : Rs.25,52,000/- Ex Showroom
BMW K1600 GTL Price in India & Basic Information
|
BMW K1600 GTL Technical Specification
|
|
| Engine | In Line Six Cylinder, Four Stroke Engine With 4 Valves per Cylinder |
| Displacement | 1649 cc |
| Fuel Management | Electronic Fuel Injection |
| Max. Power | 160 hp @ 7500 rpm |
| Gearbox | 6 – Speed Gearbox |
| Compression Ratio | 13:0:1 |
| Tyre Size Front | 120 / 70 R17 |
| Tyre Size Rear | 180 / 55 R17 |
| Tank Capacity (lts) | 25 |
| Acceleration 0–100 km/h (s) | 4.7 |
| Top speed (km/h) | 222 |
| Kerb Weight (kg) | 319 |
| Overall Length (mm) | 2330 |


No comments:
Post a Comment