Showing posts with label india. Show all posts
Showing posts with label india. Show all posts

Thursday, 7 March 2013

மார்ச்சு 08 - உலக மகளிர் தினம்..

 மார்ச்சு 08 - உலக மகளிர் தினம்..
இனிய வாழ்த்துக்கள் மகளிர்
அனைவருக்கும். நல் வணக்கத்துடன்...
 மகாகவி பாரதியின் பார்வையில் புதுமைப் பெண்ணின்
இலக்கணம்..
 "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெஞ்சுரம்"
 "சேர்த்த பொருளை சிக்கனமா செலவு செய்ய
பக்குவமா அம்மா கையில கொடுத்து போடு
செல்லக்கண்ணு..
 அத ஆறு நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு"..
 பட்டுக்கோட்டையாரின் பாட்டு வரிகள்...
 மேற்கோள்களை நினைவு கூர்ந்து பாரதி
மொழிந்தவாறு
"போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்"..
 என இதயப் பூர்வமான மகளிர் தின
வாழ்த்துக்கள்..
 "நாட்டிற்க்கு ஏற்றம் தருவது
பெண்களின் முன்னேற்றம்"
- அறிஞர் அண்ணா..

Sunday, 7 October 2012

சமையல் கியாசை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் உயர்கிறது: டீலர்களுக்கு ஆதரவாக அரசு முடிவு


சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோக டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷனை ரூ.25.83-ல் இருந்து ரூ.37.25 ஆக நேற்று மத்திய அரசு உயர்த்தியது. இதனால் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.11.42 உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் சமையல் கியாஸ் டீலர்களின் கமிஷனை உயர்த்தியதுபோல பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் டீலர்களின் கமிஷனை உயர்த்துவது பற்றியும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தங்கள் கமிஷனை பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.2.10-ம், டீச லுக்கு லிட்டருக்கு ரூ.1.33-ம் அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். பங்க் உரிமையாளர்கள் இதுபற்றி கூறுகையில், நாங்கள் வருடத்துக்கு 365 நாளும் பணியாற்றுவதால் இயக்கச் செலவு அதிகமாகி விட்டது. எங்கள் முதலீடும் உயர்ந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் எங்களது கமிஷனை வெறும் 10 சதவீதம் உயர்த்துவதை எப்படி ஏற்க முடியும்? என்கிறார்கள்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கமிஷன் கோரிக்கையை முழுமையாக ஏற்க இயலாது என்று பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது. பெட்ரோலுக்கான கமிஷனை 23 பைசா உயர்த்தியும், டீசலுக்கான கமிஷனை 10 பைசா உயர்த்தியும் கொடுக்க பெட்ரோலியம் அமைச்சகம் முன் வந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் பெட்ரோல்-டீசல் விலை சிறிது உயரும்.

அதாவது பெட்ரோல் விலை லிட்டருக்கு 67 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 42 பைசாவும் உயரும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு இப்படி விலையை அதிகரித்துகொண்டே செல்வது எழைகள், நடுத்தர மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.