Tuesday, 2 October 2012

பூரண மதுவிலக்கை கோரி ம.தி.மு.க., உண்ணாவிரதம்

ஈரோடு: ஈரோட்டில் ம.தி.மு.க., கட்சி சார்பில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி மாநிலம் முழுவதும், நேற்று ம.தி.மு.க.,வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். ஈரோட்டில் எம்.பி., கணேசமூர்த்தி தலைமையில் நடந்த உண்ணாவிரதத்துக்கு, பூங்கொடி சாமிநாதன், குழந்தைவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக பசுமை இயக்கம் ஜீவானந்தம் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். கீழ்பவானி பசான விவசாயிகள் சங்கம் நல்லச்சாமி, காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்கம் வேலாயுதம், கீழ்பவானி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு காசியண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.நகர செயலாளர் பொன்னுசாமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment