சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் மகளிருக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில்
உலகத் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள மரிய ஷரபோவா(ரஷ்யா), சீன வீராங்கனை
லீ நா என்பவரை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஷரபோவா, 6-4, 6-0 என்ற
நேர்செட்களில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். இதன்மூலம் முதல்
முறையாக பைனலுக்கு முன்னேற முயன்ற சீனாவின் கனவு தகர்ந்தது.
நாளை
நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஷரபோவா, பெலாரசின் முன்னணி வீராங்கனை
விக்டோரியா அசரென்காவை சந்திக்க உள்ளார். அரரென்காரை அரையிறுதி போட்டியில்,
ஜெர்மனியின் மரியன் பர்டோலியை 6-4, 6-2 என்ற நேர்செட்களில் வீழ்த்தியது
குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment