Sunday, 14 October 2012

டெங்கு காய்ச்சல்: சென்னையில் 26 பேர் பாதிப்பு- மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:-
 
சென்னையில் இந்த மாதம் 26 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
 
தண்டையார்பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக தேவையான முன் எச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 
கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. நகரில் உள்ள 456 தனியார் மருத்துவமனைகளோடு மாநகராட்சி தொடர்பு வைத்துள்ளது. டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் அதுபற்றி உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
 
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி இருப்பது, டயர் மற்றும் தேங்காய் சிரட்டை போன்ற கழவுகளை கொட்டி வைப்பதால் அதில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதுபற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுகிறது.
 
கடந்த 2 நாட்களாக மாநகராட்சி பள்ளிகளில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. நாளை முதல் மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும். பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. சுற்றுப் புறங்களை துய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பொருட்களை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment