காவிரி பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் கர்நாடக அரசுகள்
தமிழகத்துக்கு எதிரான போக்கையே கடைப்பிடித்து வருகின்றன. எந்தக்கட்சி
ஆட்சிக்கு வந்தாலும் காவிரி பிரச்சினையில் மட்டும் தமிழகத்துக்கு ஒரு
சொட்டு தண்ணீர்கூட தரமாட்டோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு
நிற்கிறார்கள்.
அரசியல் சம்பந்தமே இல்லாத நடிகர் - நடிகைகளும் தமிழகத்தை எதிர்க்க தயங்குவது இல்லை. ஒவ்வொரு முறையும் கோடை காலத்தில் காவிரி பிரச்சினை எழும், மழை வந்ததும் பிரச்சினை கிடப்பில் போடப்பட்டு விடும்.
ஆனால் இந்த முறை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து வழக்குப் போட்டார். பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் நீண்ட நாட்களாக கூட்டப்படாமல் இருந்தது. முதல் - அமைச்சர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டை அணுகி காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை கூட்ட வைத்தார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் கூட்டினார். அவர் பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு ஆதரவாக உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து 9000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். ஆனால் பிரதமர் உத்தரவையே ஏற்க முடியாது என்று கர்நாடகம் கூறியதால் மீண்டும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியது.
பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு என இரு பக்கத்தில் இருந்தும் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பிரதமர் உத்தரவையும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் ஏற்க மறுப்பது என்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. மாநில கலைக்கவும் உத்தரவு விடமுடியும். இதைத்தான் நேற்று பெங்களூரில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆளும் கட்சி சார்பில் எடுத்துக் கூறப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் மற்றும் கன்னட அமைப்பு பிரதிநிதிகள் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்ற ரீதியில் பேசினார்கள். இந்தப் பிரச்சினையில் மறுஆய்வு மனுதாக்கல் செய்யும் முடிவை எடுத்தபோது அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை முதல்-மந்திரி ஷெட்டர் நிருபர்களிடம் தெரிவித்தபோதும் அவரது வீட்டின் முன் கூடியிருந்த கன்னட அமைப்பினர் முதல் - மந்திரிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்றும் கூறினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஒரு பக்கம் அரசியல் சட்ட நெருக்கடி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகள் நெருக்கடி என்று ஜெகதீஷ் ஷெட்டர் முடிவு எடுக்க முடியாமல் திணறினார். கடைசியாக அவர் ஒரு முடிவுக்கு வந்தார். ஒன்று ராஜினாமா செய்வது. அல்லது கோர்ட்டு உத்தரவை ஏற்று தண்ணீர் திறப்பது.
இதுபற்றி ஷெட்டர் கட்சி தலைவர் நிதின்கட்காரியுடன் விவாதித்தார். கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வருகிறது. அதுவரை ஆட்சியில் நீடிப்பது அவசியம். ராஜினாமா செய்தால், நிர்வாகம் கவர்னர் கைக்கு போய்விடும். எனவேதான் ராஜினாமா முடிவை ஷெட்டர் மாற்றிக்கொண்டார்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால் அது கோர்ட்டு மற்றும் பிரதமர் உத்தரவு என்று சொல்லி தப்பிவிடலாம் என்று இறுதியாக தண்ணீர் திறந்து விடும் முடிவை ஷெட்டர் எடுத்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment