Saturday, 29 September 2012

பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் உயர்வு: வரும் 1-ம்தேதி முதல்அமல்

பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 1,500 ஆகவும், தட்கல் முறை பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கு ரூ. 3,500 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் திங்கட் கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ளது. முன்னதாக, விண்ணப்ப கட்டணங்கள் முறையே ரூ, ஆயிரம் மற்றும் ரூ. 2,500 ஆக இருந்தது. இந்த விண்ணப்ப கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை இந்திய பத்திரிகை தகவல் ஆணையம் வெளியிட்டது. பாஸ்போர்ட் வழங்குவதற்கான மூலதன செலவு, அச்சடிக்கும் செலவு, விண்ணப்பதாரர்களின் விவரங்களை சோதிக்கும் காவல் துறையினருக்காகும் செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாஸ்போர்ட் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1993 ம் ஆண்டில் பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் ரூ. 300 ஆக இருந்தது. 2002 ம் ஆண்டு அந்த கட்டணம் ரூ. ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தற்போது கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பாஸ்போர்ட்டுக்காக 75 அமெரிக்க டாலர்கள் செலவிட வேண்டும்.

No comments:

Post a Comment