அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள லாங் ஐலாண்டு
பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்தவர் ஹர்ஷா மத்துலா
(வயது 18). இவர் இல்லியான்ஸ் பகுதியிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவ
வகுப்பில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி
வளாகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் இவர் நண்பர்களுடன் கலந்து
கொண்டார்.
அதன் பிறகு அவர் திடீரென்று மாயமானார்.
அவர் வீடு திரும்பாததால் அந்த பகுதி முழுவதும் தேடினார்கள். அருகிலுள்ள
துறைமுக கடல் பகுதியிலும் நீச்சல் வீரர்கள் உதவியுடன் தேடினார்கள். ஆனால்
எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதனால் மாணவரை பற்றி துப்பு கொடுத்தால்
ரூ.13 லட்சம் பரிசு தருவதாகவும் குடும்பத்தினர் அறிவித்தனர்.
இதற்கிடையில்
இல்லியான்ஸ் அருகே வில்மெத்தி என்ற இடத்தில் துறைமுகம் அருகே கடலில் 2
படகுகளுக்கு இடையே ஒரு வாலிபரின் பிணம் மிதப்பதாக போலீசுக்கு தகவல்
கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி சட்டைப்பையில்
இருந்த அடையாள அட்டை, செல்போன் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதில் பிணமாக
கிடந்தவர், காணாமல் போன மாணவர் ஹர்ஷா மத்துலா என்பதை கண்டுபிடித்தனர்.
ஆனால் அவர் எப்படி? இறந்தார் என்பது மர்மமாக இருக்கிறது. இது தொடர்பாக
வில்மெத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி
வருகிறார்கள்.
No comments:
Post a Comment