காவிரி நதிநீர் ஆணையத் தலைவரான பிரதமர் உத்தரவிட்டபடி தமிழகத்திற்கு
அக்டோபர் 15-ம் தேதி வரை வினாடிக்கு 9000 கன அடி தண்ணீர் திறந்துவிட
வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து
கர்நாடகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய
தீர்மானிக்கப்பட்டது.
இதுபற்றி கர்நாடக முதல்
மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களிடம் கூறுகையில்,செப்டம்பர் 19-ம் தேதி
அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கும்படி பிரதமரிடம் வலியுறுத்த
உள்ளோம். இதுதொடர்பாக இன்று மாலையிலேயே உத்தரவிட வேண்டும் என்று பிரதமரிடம்
கேட்டுக்கொள்வோம்.
பிரதமரின் பதிலைப் பொறுத்து
எதிர்கால நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம். காவிரி ஆணையத்திடம் தடை
பெற்றுவிட்டால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்கொள்வதில் சிக்கல் இல்லை.
விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்
என்றார்.
No comments:
Post a Comment