வேளாங்கண்ணி கடலில் குளித்த மதுரையைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இருவர் ராட்சத அலையில் சிக்கி பலியானார்கள்.
மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர்கள் ஆரோக்கியராஜன். சீனிவாசன் இவர்கள் உள்பட 11 பேர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.
ஆரோக்கியராஜனும், சீனிவாசனும், வேளாங்கண்ணி கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலை வந்தது. இதில் இருவரும் சிக்கி கொண்டனர். அலையில் அடித்து செல்லப்பட்டு கடலில் மூழ்கி பலியானார்கள்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து 2 பேரின் பிணங்களையும் தேடினார்கள். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் 2 பேரின் உடல்களும் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த கீழையூர் கடலோர காவல்படையினர் விரைந்து வந்து 2 பேரின் பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கீழையூர் கடலோர காவல்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:
Post a Comment