Saturday, 29 September 2012

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்


15 நாட்களுக்குப் பின்னர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக மீனவர் ஒருவர் தெரிவித்தார். 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது கற்களை வீசியதாகவும், படகில் ஏறி வலைகளை சேதப்படுத்தியதாகவும், மீன்களையும் அவர்கள் அள்ளிச் சென்றதாகவும் தாக்குதலுக்கு ஆளான மீனவர் பாண்டி தெரிவித்தார். இதையடுத்து அவர் படகுடன் கரைக்கு திரும்பி விட்டார். டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 14ம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். 15 நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு 686 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்கச் சென்றனர்.

No comments:

Post a Comment