Showing posts with label srm university. Show all posts
Showing posts with label srm university. Show all posts

Saturday, 29 December 2012

எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, இந்திய பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

‘இந்தியாவில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டியது அவசியம். அந்தக் காலத்தில் நாளந்தா, தக்சஷீலா உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் உருவாகி, சிறந்த கல்வி அளிக்கும் சர்வதேச மையமாக விளங்கின. அதில் உலகம் முழுவதிலும் இருந்து வந்த மாணவர்கள் படித்தனர். ஆனால், இப்போது பல இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

இதனைத் தடுப்பதற்கு சர்வதேச தரத்திற்கு இணையான உயர்கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவை. உலகத் தரத்திலான ஆராய்ச்சி, கற்றல் மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்கி, உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களாக வருவதை இந்திய பல்கலைக்கழகங்கள் நோக்கமாக கொள்ள வேண்டும்’ என்று பிரணாப் வலியுறுத்தினார்.