Showing posts with label Malaysia. Show all posts
Showing posts with label Malaysia. Show all posts

Monday, 17 December 2012

புத்ரஜெயா -மலேசியா

புத்ரஜெயா மலேசியாவில் உள்ள ஒரு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம். 1999 முதல் மலேசியாவின் கூட்டாட்சி நிருவாகத் தலைநகராகச் செயல்படுகிறது. கோலாலம்பூரின் தெற்கே அமைந்துள்ள இதில் புது அரசு தலைமையகம் வீடுகள், கடைகள் அற்ற உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து அரசு வேலைகளும் முடித்துக்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
புத்ரஜெயா மலேசியாவின் செலாங்கோர் மாகாணத்தில் உள்ளது. அந்த மாகாணநிர்வாகத்தில் இருந்து தலைநகர உருவாக்கத்திற்காகப் பெறப்பட்ட 12000 ஏக்கர் நிலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நிர்வாகத்தலைநகரம் இது. இந்நகரத்தின் 38 சதவீத நிலம் பசுமைக்காக ஒதுக்கப்பட்டிருப்பதனால் காடு சூழந்த உயரமற்ற குன்றுகள் நடுவே அரண்மனைகளின் தொகுதியாக அமைந்திருக்கிறது இது.
 செயற்கைநீர் நிலைசூழ அமைந்திருந்த புத்ரா மசூதி நவீனக் கட்டிடக்கலையும் பாரம்பரிய இஸ்லாமியக் கட்டிடக்கலையும் இணைவதன் அழகிய உதாரணம். பெரும்பாலான கட்டிடங்கள் மசூதிகள் போல வடிவமாய் உள்ளன .
 அகலமான சாலைகள், நன்றாக பராபமரிக்கப்பட்ட சாலையோர பூங்காக்கள், சுத்தத்தின் பளீரிடல். மலேசியா தன்னை முதல் உலக நாடாக எண்ணிக்கொண்டு முயல்வதன் கண்கூடான உதாரணம் அந்நகரம்.