Thursday 25 December 2014

K.B- உடையாத நீர்க்குமிழி-கே.பாலச்சந்தர்




திரைவானில் நீ ஏவிவிட்ட
கணைகள் யாவும் -இன்று
நட்சத்திரங்களாய்
ஒளிர்கின்றன !
கலையுலகில்
நீண்ட பெரும் மலைத்தொடரை
எழுப்பிவிட்ட சிகரம் நீ !
உன்முன்னால் கைகூப்பி
நிற்கும் இரண்டு மாமலைகள் !
புதுமைப்பெண்களை
புதுக்கவிதைகளாய் - திரையில்
படைத்து விட்ட நீ
பட உலகத்தின் பாரதி !
வறுமையின் நிறம் சிகப்பென்று
பொறுமையை விடச்சொல்லி -
இளைய தலைமுறைக்கு
எதிர்நீச்சல் கற்று கொடுத்தாய் !
தண்ணீர் ! தண்ணீர் !-என்ற
கண்ணீர்க் கூக்குரலை
வெள்ளித்திரையில் எதிரொலித்த
வற்றாத நீர் ஊற்று நீ!
உன்வயது
எண்பத்து நாலென்று
செய்தியிலே சொன்னபோது
நம்பவில்லை நாங்கள் யாரும் !
அச்சமில்லை ! அச்சமில்லை !-என்ற
பச்சை தமிழன் நீ -வானத்து
வெண்மீன்கள் குறைவென்று
அங்கேயும் புத்தம் புது
தாரகைகளை படைக்கப்
போய்விட்டாயோ !
ஒரு வெற்றிடம் உருவாக்கி
சென்றுவிட்ட உன்னை எண்ணி
கலையுலகம் வடிக்கும்
கண்ணீர்க் கடலில் -
என்றுமே உடையாத நீர்க்குமிழி நீ !


 

Wednesday 10 December 2014

பேஸ்புக்கில் வேலை: ஐஐடி மாணவிக்கு ரூ.2 கோடி சம்பளம்




மும்பை ஐஐடி மாணவி ஆஸ்தா அகர்வாலுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.


20 வயதாகும் ஆஸ்தா இப் போது ஐஐடியில் 4-வது ஆண்டு கணிப்பொறி அறிவியல் படித்து வருகிறார். கடந்த மே மாதம் கலி போர்னியாவில் பேஸ்புக் தலைமை யகத்தில் தனதுஇன்டர்ன் ஷிப்பயிற்சியை முடித்தார். அப் போது அவரது திறமையை அடை யாளம் கண்டுகொண்ட பேஸ்புக் நிறுவனம் அவருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. இது குறித்து ஆஸ்தா கூறியதாவது:

எனக்கு கிடைத்துள்ள இந்த வேலை மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. “இன்டர்ன்ஷிப்பில்எனது பணியில் திருப்தியடைந்ததால்தான் இந்த வாய்ப்பை பேஸ்புக் நிறுவனம் எனக்கு வழங்கியுள்ளது. எனது படிப்பை முடித்தவுடன் அடுத்த ஆண்டு அக்டோபரில் பணியில் இணைவேன் என்றார்.

ஆஸ்தாவின் அப்பா அசோக் அகர்வால், ராஜஸ்தான் மாநில மின்வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஆஸ்தாவின் சகோதரி கெமிக்கல் இன்ஜினீயராக உள்ளார்.

Friday 18 July 2014

மின்சார நுகர்வு கட்டணம் செலுத்த மக்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் இணையத்தளம் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்

மின்சார நுகர்வு கட்டணம் செலுத்த மக்கள்  தமிழ்நாடு மின்சார வாரியம் இணையத்தளம் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்

முதலில் மின்சார நுகர்வு கட்டணம் தெரிந்து கொள்ள  http://tneb.tnebnet.org/newlt/menu3.html


மின்சார நுகர்வு கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் இணையத்தளம்
 
 
TNEB / TANGEDCO portal (https://www.tnebnet.org/awp/login): TANGEDCO or Tamil Nadu Generation and Distribution Corporation Ltd is the new electricity distribution company in Tamil Nadu. Earlier it was called TNEB or Tamil Nadu Electricity Board. The new discom or distribution company has a new website http://www.tangedco.gov.in/ and their new online bill payment portal link is as mentioned above. The portal provides all facilities to make bill payment online and a lot of their consumers use it. One just needs to create a login on the portal using the customer number or service number.

Friday 9 May 2014

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது


 1193 மதிப்பெண் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாணவி சுஷாந்தி மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

1192 மதிப்பெண் பெற்று தருமபுரி மாணவி அலமேலு மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

 1191 மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு நித்யா, நாமக்கல் துளசி ராஜன் ஆகிய 2 மாணவர்கள் மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.

Friday 27 December 2013

அர்விந்த் கெஜ்ரிவாலின் வாழ்க்கைப் பாதை

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று, பின்னர் அரசியல் கட்சி கண்ட ஓராண்டுக்குள்ளாக டெல்லியில் ஆட்சியைப் பிடித்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால். அரசியல் கட்சிகளின் வழக்கமான பாணியைக் கையாளாமல் ஆம் ஆத்மி கட்சியை மாறுபட்ட பாதையில் வழிநடத்தி, சாதித்துள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால்.
ஹரியானா மாநிலம் ஹிசாரில் 1968-ம் ஆண்டு பிறந்த அர்விந்த் கெஜ்ரிவால் காரக்பூர் ஐஐடியில் மெக்கானிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். 1989-ல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சேர்ந்த அவர், 3 ஆண்டுகளில் அதில் இருந்து விலகினார்.
1995-ம் ஆண்டு இந்திய வருவாய்த் துறையில் சேர்ந்த அவர், அதன் துணை ஆணையராக பணியாற்றியுள்ளார். வருவாய்த்துறை இணை ஆணையர் பணியில் இருந்து 2006-ம் ஆண்டு விலகிய அரவிந்த் கெஜ்ரிவால், முழுநேர சமூகப் பணியில் ஈடுபட்டார்.
1999-ம் ஆண்டு, பரிவர்த்தன் என்ற இயக்கத்தைத் தொடங்கி, அதன் மூலம் மின்சார வசதி, ரேஷன் பொருட்களைப் பெறுதல் போன்ற உதவிகளை மக்களுக்குச் செய்தார் அர்விந்த் கெஜ்ரிவால். போலி ரேஷன் அட்டைகள் தயாரிக்கப்பட்டதை கண்டறிந்து பரிவர்த்தன் இயக்கம் மூலம் முறைகேடுகளை அம்பலப்படுதினார். தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி அரசு நிர்வாகத்தில் நிகழ்ந்த வேறு பல முறைகேடுகளையும் அவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.
ஊழலை ஒழிக்க உதவும் வகையில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரும் போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு தோள் கொடுத்தார் அர்விந்த் கெஜ்ரிவால். இதன் தொடர்ச்சியாக, தூய நிர்வாகத்தை கொடுக்கும் நோக்கத்துடன் 2012-ம் ஆண்டு, நவம்பர் 26-ல் ஆம் ஆத்மி கட்சியை அவர் தொடங்கினார். ராமன் மகசேசே விருது, சத்யேந்திர கே டூபே விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள அர்விந்த கேஜ்ரிவால், ஸ்வராஜ் என்ற நூலையும் எழுதியுள்ளார்.
டெல்லி முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள அர்விந்த் கெஜ்ரிவால், அரியானா மாநிலம் பிவானி கிராமத்தில் பிறந்தவர். இந்த கிராமத்தைச் சேர்ந்த 4-வது முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆவார். இவருக்கு முன்னர் பன்சி லால், பனராசி தாஸ், மாஸ்டர் ஹூகம் சிங் ஆகிய மூன்று முதலமைச்சர்களும் இதே பிவானி கிராமத்தில் இருந்து டெல்லியை ஆண்டவர்கள்.

Tuesday 24 December 2013

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும்

அடுத்த ஆண்டு நடைபெறும் 7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணி நிர்வாகமும், 5 இந்திய வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி தக்கவைக்கும் வீரர்களில், முதல் வீரருக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும், ஒரு அணி அதிகபட்சமாக 60 கோடி ரூபாய் வரை ஏலத்திற்காக செலவிடலாம் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வீரர்கள் ஏலம், தேவைப்பட்டால் பிப்ரவரி 13-ம் தேதியும் நடைபெறும் என்றும், ஏலம் நடைபெறும் இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday 14 October 2013

ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் தங்கள் வசூலைத் தொடங்கியுள்ளன-தீபாவளி பண்டிகைக்கு

இன்னும் 20 நாட்கள் இருக்கிற நிலையில், ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் தங்கள் வசூலைத் தொடங்கியுள்ளன. சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோர், பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர். இவர்களில் கணிசமானோர், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனை பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது, பொதுமக்களிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப் பணம் வசூலிப்பது வழக்கம். அடுத்த மாதம் 2-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வரும் 30, 31 மற்றும் அடுத்த மாதம் 1- ம் தேதி ஆகிய நாட்களில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டன. அதுபோல் அரசு விரைவு பஸ்களில் பயணிப்பதற்கான முன் பதிவுகளும் முடியும் தருவாயில் உ ள்ளன. இதைத் தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் இந்த ஆண்டும் பயணிகளிடம் அதிக கட்டணத்தை வேட்டையாட தொடங்கி விட்டன. இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்ததாவது: அரசு சொகுசு பேருந்துகளில் பயணிக்க திருச்சிக்கு ரூ.260, மதுரைக்கு ரூ.350, திருநெல்வேலிக்கு ரூ. 465, கன்னியாகுமரிக்கு ரூ.530, கோயம்புத்தூருக்கு ரூ.420 என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஆம்னி சொகுசு பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.500, மதுரைக்கு ரூ.560, திருநெல் வேலிக்கு ரூ.630, கன்னியா குமரிக்கு ரூ.690, கோயம்புத்தூ ருக்கு ரூ.580 என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், பிரபலமான ஆம்னி பஸ் நிறுவனங்களில், வழக்க மான பஸ்களில் தீபாவளிக்கான முன் பதிவு முடிந்துவிட்டது. இனி வாய்ப்பில்லை என்கிறார்கள். மற்ற நிறுவனங்களிலோ, சிறப்பு பஸ்கள் விட உள்ளோம். அதற்கு ஆ ன்-லைனில் முன் பதிவு செய்யுங்கள் என்கிறார்கள். ஆன்- லைன் முன் பதிவில் திருநெல்வேலிக்கு ரூ. 1200, திருச்சிக்கு ரூ.700, ரூ 1000 என்கிற ரீதியில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கிற நிலையில், பயணிகளிடம் அதிக கட்டணத்தை வேட்டையாட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இப்போதே தொடங்கிவிட்டார்கள். இதைத் தடுக்க போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday 8 October 2013

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் 84 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் 84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் கடந்த கல்வி ஆண்டில் (2012-13) எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்த 3,900-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணையதளம் www.tnmgrmu.ac.in-தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (அக்.3) இரவு வெளியிடப்பட்டது.
முதலாம் ஆண்டு தேர்வில் 84 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்த மாணவர்களில் சராசரியாக 90 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மருத்துவக் கல்லூரி- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தலா 89 சததவீதம், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 92 சதவீதம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் 90 சதவீதம் என மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சுயநிதி கல்லூரிகளில் படித்த மாணவர்களில் சராசரியாக 80 முதல் 85 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இரண்டு வாரத்தில் மறு தேர்வு: எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால்கூட, இரண்டாம் ஆண்டுக்கு குறிப்பிட்ட மாணவர் செல்ல முடியாத அளவுக்கு பிரேக் சிஸ்டம் நடைமுறையில் உள்ளது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும் வகையில் தேர்ச்சி அடையாத பாடங்களுக்கான மறு தேர்வை உடனடியாக நடத்தி முடிவை அறிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு உதவும் வகையில் மறு தேர்வை இரண்டு வாரங்களுக்குள் நடத்த தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
மறு தேர்வு குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை (அக்.4) வெளியாகும் என்று பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Thursday 18 July 2013

கவிஞர் வாலி இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.


தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 82.

நுரையீரல் தொற்றுநோய் காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த வாலிக்கு திரை உலகினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கவிஞர் வாலி - வரலாறு

 வாலிபக் கவிஞர்.... காவியக் கவிஞர் என்றும் அழைக்கப்படும் கவிஞர் வாலி கடந்த 1931 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்தார்.

வாலிக்கு பெற்றோர் வைத்த பெயர் ரங்கராஜன்.

சிறு வயதில் ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு காட்டிய அவர், ஓவியர் மாலி என்பவரின் மேல் கொண்ட மதிப்பால் தன்னுடைய பெயரை வாலி என்று மாற்றிக் கொண்டார்.

ஆரம்ப காலங்களில் திருச்சி வானொலியில் பணியாற்றியபோது, அவர் எழுதிய கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்ற பாடல் மிகவும் பிரபலமானது.

இந்தப் பாடல் கொடுத்த புகழ் தான் திரைப்படங்களில் பாட்டெழுத வேண்டும் என்ற ஆசையை வாலியின் மனத்தில் விதைத்தது என்றே சொல்லலாம்.

இதை அடுத்து சென்னைக்கு வந்த வாலி, கடந்த 1958 ஆண்டு நிலவும் தாரையும் நீயம்மா , இந்த உலகம் ஒரு நாள் உனதம்மா என்ற தன் முதல் பாடலை எழுதினார்.

இதற்குப் பிறகு அவர் தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தாலும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த கற்பகம் திரைப்படம் தான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

இதற்குப் பிறகு பல பாடல்களை வாலி எழுதி வந்தாலும், எம்.ஜி.ஆரின் அரசியல் கொள்கைகளைப் பரப்பும் விதமாக பல பாடல்களை எழுதும் கவிஞராக உருவெடுத்தார் கவிஞர் வாலி .

எம்.ஜி.ஆர் மட்டுமின்றி சிவாஜி கணேசனுக்கும் ஏராளமான வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் வாலி.

அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய நடிகர்களுக்கும் பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் வாலி.

இது மட்டுமின்றி கமல்ஹாசன் நடித்த பல படங்களுக்கும் வாலி பாடல்கள் எழுதியிருந்தாலும் அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் இடம்பெற்ற உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் என்ற பாடல் தேசிய விருதைப் பெற்றது.

இதற்குப் பிறகு விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் பல நடிகர்களுக்கு வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் வாலி.

கடந்த 50 ஆண்டுகளில் 15,000க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார்.

பல பாடல்களுக்கு விமர்சிக்கப்பட்டாலும், அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டும், புது விஷயங்களைக் கற்றுக் கொண்டும் ஜனரஞ்சகப் பாடல்களை படைத்த கவிஞர் வாலி எனப் புகழாரம் சூட்டுகிறது திரையுலகம்.

சினிமா என்பது ஒருபக்கம் என்றாலும், அவதார புருஷன், பாண்டவர் பூமி, இராமானுஜ காவியம் என பல கவிதை நூல்களை எழுதியுள்ளார் கவிஞர் வாலி.

கவிதை, பாடல் என்பது மட்டுமின்றி பொய்க்கால் குதிரை, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் கவிஞர் வாலி.

தமிழ்நாட்டின் சிறந்த பாடலாசிரியருக்கான மாநில விருதை 5 முறை பெற்றுள்ள கவிஞர் வாலிக்கு, கடந்த 2007 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

இன்று அவர் மறைந்திருந்தாலும், காற்று மண்டலத்தில் உலா வரும் அவரது பாடல்கள் என்றென்றும் அவர் புகழை நீடித்து நிற்கச் செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை.